Tuesday, December 4, 2018

HACL POST 14

HACL POST 14

நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா ?.  ஏன் முடியாது ? ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும்போழுது  நமக்கு   முன்னே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று இன்று முழுவதும் நான்  சந்தோசமாக இருக்கபோகிறேன் என உறுதி எடுத்து கொள்ளலாம். அல்லது இன்று முழுவதும் உம்மணா   மூஞ்சியாக இருக்கபோகிறேன்  என நினைத்து கொள்ளலாம். அன்று முழுவதும் அப்படிதான் நடக்கபோகின்றன  நாம் தான் நமது சந்தோஷத்தை  தீர்மானித்து கொள்கிறோம். வாழ ஆசைப்படுங்கள். சந்தோஷமாக வாழ ஆசை படுங்கள்.

HACL POST 13

HACL  POST  13

மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என ஏங்கி கொண்டிருக்கிறோமா ?  மற்றவர்கள் கை தட்டல்களை எதிர்பார்ப்பதை குறைத்தாலே நமக்கு நிறைய கை தட்டல்கள் வரும். புதிய ஆடை வாங்கினால் உடனே மற்றவர்களிடத்தில் காண்பித்து அவர்கள் நன்றாக இருக்கிறது என்றால் நமக்கு  சந்தோஷம். அவர்கள் ஓகே என்று சொன்னாலே நமது சந்தோஷம் போய் விடுகிறது என்றால் நமது சந்தோஷம் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளிலா இருக்கிறது ? நமது சந்தோஷம் வெளியில் இருக்கிறதா நமக்கு உள்ளேயே இருக்கிறதா ?

HACL POST 12

HACL  POST 12

உலகத்தில் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை சிறந்த பொருட்களையும் வைத்திருக்கவில்லை.  இருக்கும் பொருட்களை தனக்கு கிடைத்தவைகளை  மிக சிறந்தவை என நினைத்து சந்தோஷப்படுவதால்  மட்டும் தான்.
நம்மிடம் என்ன என்ன நல்ல அம்சங்கள் இருக்கின்றன என தெரியாமலே அடுத்தவரிடம் உள்ள விஷயங்களை பார்த்து பார்த்து நமது தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டு இருக்கிறோம்.

HACL POST 11

HACL  POST 11

One more issue which affects happiness: Children don't obey our instructions. If they are adolescent, challenges are more. 'Any rule means, first violate'. We are afraid that they will suffer because of growing indiscipline. But we can't stop them from suffering.  Once we will inform or advice. If they don't follow simply leave it.

HACL POST 10

HACL  POST 10

If you keep off from news channels and serials, you will be little safe from negativity. Very rarely I watch TV. May by one hour or two hours in a month.

HACL POST 9

HACL POST 9

இப்பொழுது மக்களுக்கு உள்ள மிக பெரிய வியாதி, கவனக் குறைபாடு. எதிலும் ஒரு முழுமையான ஈடுபாடு இல்லை. எல்லா வேலைகளையும் ஏனோ தானோ என்று தான் போய்க்கொண்டு இருக்கிறது.

அபார்ட்மெண்டில், கீழ்த்தளத்தில் இருக்கும் தபால் பெட்டியை பார்ப்பதே இல்லை. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை அந்த அந்த நேரங்களில் சர்வீஸுக்கு கொடுப்பதில்லை. எதையாவது எங்கேயாவது வைத்து விட்டு தேடுவதே நேரம் சரியாகப் போகிறது.

எல்லா கவன குறைவினால் எல்லா இடங்களிலும் நேரத்தை தொலைத்து விட்டு வீட்டை விட்டு தாமாதமாகவே கிளம்புகிறார்கள். பிறகு சாலையில் அவசரப்படுகிறார்கள். எதற்கு ஹாரன் அடிக்கிறோம் என்று தெரியாமலே ஹாரன் அடித்து கொண்டே போகிறார்கள்.  What is Missing ? Focus in Life. That will affect not only the individual's happiness, but the entire family or the entire dept/office.

HACL POST 8

HACL POST 8

உங்கள் வாழ்க்கையில் ரகசிய பக்கங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு சந்தோஷம் அதிகமாக இருக்கும்.